News Just In

2/25/2026 06:45:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி: அரசாங்கம் உறுதிமொழி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி: அரசாங்கம் உறுதிமொழி!




உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதியை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த தாக்குதலை தடுக்க தவறியவர்கள், இந்த தாக்குதலை வழிநடத்தியவர்கள் மற்றும் இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாகவும், வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், சில நபர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் ஏப்ரல் 21ற்கு முன்னதாக நீதியை வழங்க முடியாவிட்டாலும், விரைவில் இதற்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: