
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று 27 மற்றும் நாளை 28 ஆம் திகதிகளில் இலங்கை இந்திய மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.திருவிழா நிகழ்வுகள் இன்று 27 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றன. இதனைத் தொடர்ந்து திருச் செபமாலை தியானம் மற்றும் இலங்கை – இந்திய பக்தர்கள் இணைந்து நடத்தும் திறந்த வெளி சிலுவைப்பாதை ஆகிய நிகழ்வுகள் இன்று மாலை ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளன.
நாளை 28 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி சிறப்புக் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றப்படவுள்ளது.யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோரின் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட இரு நாடுகளின் அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகளின் பங்கேற்பில் இந்த கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது
.இம்முறை திருவிழாவில் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 ஏனைய படகுகளில் நாலாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக, இந்திய ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது
No comments: