News Just In

2/23/2026 01:23:00 PM

கொழும்பு - மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு - மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!



டிட்வா சூறாவளியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான 'மீனகயா' இரவு நேர கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று 23 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், நாளை (24) முதல் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் வழமை போன்று தினசரி சேவை ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 07.00 மணிக்கும், மட்டக்களப்பிலிருந்து இரவு 08.00 மணிக்கும் குறித்த ரயில் புறப்படும்.

குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை ஆசனங்களைக் கொண்ட இரண்டு பெட்டிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments: