
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மூன்று பேர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை பிரதான கடற்கரை சர்ச்சைக்குரிய கட்டுமானம் மற்றும் புத்தர்சிலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (02) இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுஜன அரகலய குடிமக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் சானக்க பண்டார மற்றும் சிங்கள பெளத்த ஐக்கியம் அமைப்பின் செயலாளர் லங்கா தரங்க ஆகியோரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பெளத்த சமயத்தை அவமரியாதைக்கு உட்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என குறித்த நபர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதேவேளை சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை வெளியில் இருந்து வருகின்றவர்கள் வந்து பார்ப்பதனால் தங்களுக்கு அவர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போவதாகவும் உறவினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
No comments: