News Just In

2/13/2026 05:14:00 PM

மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் கலாச்சார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கல்!

மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் கலாச்சார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கல்


நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் இஸ்லாமிய சமூக கலாசார மரபு அமைப்பிற்கான கலாசார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் என். எப். அய்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக கணக்காளர் எம். ஆர். நசீமுல் ஹக், கலாசார உத்தியோகத்தர் ஏ. டப்ளியு. நாளிகா தமயந்தி, திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. எல். பாத்திமா சப்றானா, விடய உத்தியோகத்தர் எம். பாத்திமா சுஜாஆ, நிதி உதவியாளர் பி. எம். ஆசீர் மற்றும் பெறுகை நடைமுறை உத்தியோகத்தர் ஐ. எல். றிஹானுல் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் மூலம், இஸ்லாமிய சமூகத்தின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார மரபுகளைப் பாதுகாக்கவும், இளம் தலைமுறையினரிடையே கலாச்சார விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் தேவையான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அரசின் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் ஊடாக சமூக மற்றும் கலாசார முன்னேற்றத்திற்கான ஆதரவு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: