News Just In

2/02/2026 01:37:00 PM

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி !

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி !



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி 2026 பெப்ரவரி 01 ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். றிஸானா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராக இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிர்வக சம்மாந்துறை நிலையத்தின் ஆங்கிலத் துறைத் தலைவர் எம்.பி. நௌசாத் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவத் திறன்கள், தன்முனை வளர்ச்சி, தொடர்பாடல் திறன், குழுப்பணி மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்.

மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவெடுப்பதற்கான வழிகாட்டல்களையும், நடைமுறை உதாரணங்களுடன் கூடிய பயிற்சிகளையும் அவர் வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கேள்விகள் எழுப்பியமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

இந்த நிகழ்வு ஸஹிரியன்ஸ் Y2K அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்

No comments: