News Just In

1/28/2026 06:28:00 PM

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி ஆரம்பம்!

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்

இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்காக தமிழ் மொழி மூலம் ஜப்பான் மொழி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கை நெறி, சமுர்த்தி மற்றும் அஸ்வெஸ்ம உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை இலக்காகக் கொண்டு, முழுமையாக 100% இலவசமாக வழங்கப்படுவதுடன், Online முறையில் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்புகளை நாடும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவதுடன், அவர்களின் தொழில் கனவுகளை நனவாக்கும் முதல் படியாகவும் இத்திட்டம் கருதப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு,
திட்ட முகாமையாளர்,
சமுர்த்தி வங்கிச் சங்கம்,
பிரதேச செயலகம்,
சாய்ந்தமருது
தொலைபேசி : 067 22 25 266

இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments: