(நூருல் ஹுதா உமர்)
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், இவ்வாண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரிசோதனை முகாம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.பி.ஏ.றாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்முனை வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாணவர்களின் செய்முறை அறிவையும் பரீட்சைத் தயார்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயற்பாடு, கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாக அமைந்தது.
No comments: