Ashraff khan |
தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் செய்ய வருகின்ற வியாபாரிகள் பின்னர் மக்களை மறந்து விடுகின்றனர்.இவ்வாறு நாபீர் பௌண்டேசன் ஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நாலாபுறங்களிலும் பல சமூக சேவைகளை செய்து வரும் நாபீர் பெளண்டேசனானது அன்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கிவருகின்ற மகளிர் அமைப்புக்களை சந்தித்திருந்தது. பெளண்டேசனின் ஸ்தாபக தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீரின் தலைமையில் சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் மகளிர் அமைப்புக்களை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய பொறியயலாளர் நாபீர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் செய்ய வருகின்ற வியாபாரிகள் உங்களிடத்தில் வந்து ஆயிரம் அல்லது இரண்டாயிரங்களை கொடுத்து வாக்குகளை சூரையாடிய பின் அவர்கள் மீண்டும் உங்களைப் பார்க்க வருவது அடுத்த தேர்தல் காலத்தில் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாபீர் பெளண்டேசனானது அரசியல் அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் மகளிர் அமைப்புக்களை பிரதி நிதித்துவப்படுத்தி பல்வேறு நலன் பேணும் திட்டங்களை செய்து வருகின்றது.
நாங்கள் எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தாலும் எமது பிள்ளைகளுக்கு கல்வியினை கொடுத்து அவர்களை சமூதயத்தில் உருவாக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது. கல்வியினை எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது காசு சம்பாதிக்கின்ற குறிக்கோளாக மட்டும் கையில் எடுத்து செயற்படாமல் ஒரு படித்த சமூதாயத்தினை கட்டி எழுப்புவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும்.
அது மார்க்க கல்வியாக இருந்தாலும் சரி.! உலகக் கல்வியாக இருந்தாலும் சரி.! அதனை நாங்கள் எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது எமது கடமையாகும். அதே போன்று தேர்தல் காலங்களில் உங்களிடத்தில் வாக்கு பிச்சை கேட்டு வருகின்ற வியாபாரிகளுக்கும் நீங்கள் சிறந்ததொரு அரசியல் கலாச்சாரமிக்க அரசியல் கல்வியினை கொடுக்கின்ற அல்லது அவர்களை தெளிவுபடுத்துகின்ற சமூதாயமாக மாற வேண்டும். குறித்த மகளிர் அமைப்புக்களுடனான சந்திப்பில் பிரதேசத்து மகளிர் அமைப்புக்கள் நாபீர் பெளண்டேசனுடன் கைகோர்த்து எதிர்காலத்தில் நாபீர் பெளண்டேசன் முன்னெடுக்கின்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பெளண்டேசனின் ஸ்தாபக தலைவரிடம் வாக்குறுதி அளித்தனர்.

No comments: