News Just In

1/28/2026 08:32:00 AM

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடிய கனேடிய உயர்ஸ்தானிகர்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடிய கனேடிய உயர்ஸ்தானிகர்




யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகு முறைகள் , அரசியல் நிலைப்பாடுகள் , எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.

No comments: