News Just In

1/28/2026 08:36:00 AM

திங்கட்கிழமைக்குப் பின்னர் வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தீர்மானம்

திங்கட்கிழமைக்குப் பின்னர் வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தீர்மானம்




பேச்சுவார்த்தைக்கு முன்வராது சுகாதார அமைச்சர் வைத்தியர்கள் மீது சேறு பூச முயல்வதால், எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் வைத்தியர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றிவருகிறது. , எமது சங்கத்துக்கு வழங்கிய எழுத்துபூர்வ உடன்படிக்கையையும் மீறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கை இன்று (27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டதுடன், இது 100 சதவீத வெற்றியை அளித்துள்ளது. வைத்தியர்களின் சம்பளப் பிரச்சினை, வரிச் சுமை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட எழுத்துமூல உடன்படிக்கையையும் அரசாங்கம் மீறியுள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முறையான வேலைத்திட்டம் அவசியம். எனினும் அரசாங்கம் அதனை ஏற்காது தனியார் மயமாக்கலை நோக்கிச் சுகாதாரச் சேவையைக் கொண்டு செல்ல முயல்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தும், பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சுகாதார அமைச்சர் வைத்தியர்கள் மீது சேறு பூச முயல்கிறார். ஆகையால் எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments: