சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலையத்தின் அபாகஸ் கல்வி கற்ற மாணவர்களுக்கு நான்காவது பட்டமளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ. றாஸிக் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ICAM ABACUS பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களும் சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் அபாகஸ் போட்டிகளில் சிறப்பான சாதனைகள் புரிந்த மாணவர்கள் உட்பட, பல்வேறு நிலைகளில் திறமைகளை வெளிப்படுத்திய சாதனை மாணவர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் அறிவாற்றல், கணிதத் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அபாகஸ் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பொதுநிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் யூ.எல். நஸார் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி உப பீடாதிபதி ஏ.ஜீ. அஹமட் நளீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.
விழாவின் போது மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கியதுடன் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றிக் கேடயம் பரிசுகளும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.
மேலும், மாணவர்களை இத்தகைய உயர்ந்த சாதனைகளுக்கு வழிநடத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய அதிதிகள் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர், ICAM அபாகஸ் பயிற்சி மாணவர்களின் மனக்கணிதத் திறன், நினைவாற்றல் மற்றும் கல்விசார் முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டனர். மேலும் எதிர்காலத்திலும் மாணவர்களை தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சாதனை புரியத் தயார்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த கௌரவிப்பு விழா மாணவர்களுக்கு புதிய ஊக்கத்தையும், கல்விச் சாதனைகளில் மேலும் முன்னேற வேண்டிய உற்சாகத்தையும் அளித்ததாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
No comments: