உலகில் மனிதம் உட்பட ஒவ்வொரு உயிரினத்திற்கும் நீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. போதுமான அளவு நதி, ஏரி, குளங்கள் உள்ள பகுதிகளிலே நீர் தேவையை பூர்த்தி செய்வது சிரமமாக உள்ளது.
ஆனால், சில நாடுகள் ஒரு நதி கூட இல்லாமல் பாலைவனமாக இருந்தாலும் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. ஆனால் இந்த நாட்டில் ஒரு நதி கூட பாய்வதில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வறண்ட பாலைவனமாகவும், மலைகளுமாகவே உள்ளது. மழையும் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டுக்கு 100மிமீ க்கு குறைவாக பெய்கிறது.
சவுதி அரேபியாவின் குடிமக்கள் ஒரு நபருக்கு தினமும் தோராயமாக 360 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர், இது உலக சராசரியான 200 லிட்டரை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம் ஆகும்.
ஆனால் இங்குள்ள 3 கோடிக்கு அதிகமான மக்களுக்குமான நீர் தேவையை சவுதி அரேபிய அரசு பூர்த்தி செய்கிறது.
கடல்நீரில் உப்பு நீக்கம் சவுதியில் நதிகள் இல்லையென்றாலும், அதன் இருபுறத்தில் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா அமைந்துள்ளது.
இந்த கடற்கரைகளில், 30க்கும் மேற்பட்ட பிரமாண்டமான உப்புநீக்கும் ஆலைகளை 24 மணி நேரமும் இயக்குகி வருகிறது. உலகின் உப்புநீக்கும் நீரில் ஐந்தில் ஒரு பங்கை சவுதி அரேபியா உற்பத்தி செய்கிறது.

ஆண்டுதோறும் 2.9 பில்லியன் கன மீட்டர்களை உற்பத்தி செய்து, சவுதியின் மையத்தில் அமைந்துள்ள தலைநகர் ரியாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு பாரிய குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய உப்புநீக்கும் வளாகமான ராஸ் அல்-கைர், நாளொன்றுக்கு மில்லியன் கனமீட்டருக்கு அதிகமான புதிய நீரை உற்பத்தி செய்கிறது.
சவுதி அரேபியா தனது நீர் உற்பத்திக்கு ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவை உபயோகிக்கிறது.
சூரிய சக்தியில் இயங்கும் மாற்று வழிகளை ஆராய்ந்துவந்தாலும், தற்போது நீர் உற்பத்திக்கு பெட்ரோலியமையே நம்பி உள்ளது

No comments: