News Just In

12/15/2025 03:25:00 PM

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு..!

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு..!



நூருல் ஹுதா உமர்

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க இருக்கும் தேசிய மட்ட போட்டியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இச்சதுரங்க போட்டித்தொடர் 13.12.2025 ம் திகதி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. 11 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நடாத்தப்பட்ட இப் போட்டிகளில் கலந்து கொண்டு அவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 5 ல் கல்வி பயிலும் இவர் கடந்த இரு தடவைகள் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: