கண்டி, கம்பளை பகுதியில் உள்ள கணபதி தோட்டத்தைச் சேர்ந்த மாவத்துற மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில், பாலர் பாடசாலையில் மற்றும் ஸ்ரீ மஹிந்த விகாரையில் தற்காலிகமாக தங்கியுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு NERO அமைப்பால் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
வெள்ளத்திற்குப் பின்னர் உடனடியாக M A சுமந்திரன் அவர்களுடன் நானும் இந்த பகுதிகளைப் பார்வையிட்ட போது, அனைத்தையும் இழந்த குடும்பங்களின் துயரங்களை நேரடியாகக் கேட்க முடிந்தது. அப்போது நிவாரண உதவியுடன் மீண்டும் வருவோம் என்று நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே இந்த விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆதரவு என்பது பார்வையிடுவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் மட்டுமாக இருக்கக் கூடாது. மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் தருணங்களில், அந்த உதவி நேரடியாக அவர்களை அடைய வேண்டும்.
இதனைச் சாத்தியமாக்க அமைதியாகப் பங்களித்தும் உழைத்தும் வந்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
No comments: