வடக்கு- கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் காதர் முஹைதீன் காலமானார்
.(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி செயலாளர். எம்.ஏ. காதர் முஹைதீன் தனது 88வது வயதில், சனிக்கிழமையன்று 20.12.2025 கொழும்பில் காலமானார்.
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில் அவர் வசித்து வந்தார்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக மூத்த அதிகாரியான இவர், அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதம கல்வி அதிகாரியாகவும், மன்னார் மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும் சிறிது காலம் கடமையாற்றினார்.
மேலும், வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சின் செயலாளராகவும், வடக்கு- கிழக்கு மாகாண முகாமைத்து பயிற்சி நிறுவனப் பணிப்பாளராகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.
மேலும், வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சின் செயலாளராகவும், வடக்கு- கிழக்கு மாகாண முகாமைத்து பயிற்சி நிறுவனப் பணிப்பாளராகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.
வடக்கு- கிழக்கு மாகாண கல்விச் செயலாளராக கடமையாற்றிய சமயம், மாகாண கல்வி அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை அமைத்தார். அதேபோல், கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேசிய பாடசாலையாக அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உருவாக்க கால்கோளாகவும் இருந்தார்.
ஆரம்ப காலங்களில் இவர், அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றியதோடு அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை புரிந்தார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவியா, ஓய்வு பெற்ற ஆசிரியை நஜீமா - அக்கரைப்பற்று காதர் முஹைதீன் தம்பதிக்கு 05 பிள்ளைகள் உள்ளனர்.

No comments: