News Just In

12/21/2025 04:46:00 PM

பொத்துவில் ஏ.எம்.தாஜூதீன் அவர்களுக்கு பிரியாவிடை வைபவம்


பொத்துவில் ஏ.எம்.தாஜூதீன் அவர்களுக்கு பிரியாவிடை வைபவம்



(நூருல் ஹுதா உமர்)
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்ப கல்வி இணைப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஏ.எம். தாஜூதீன் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேக் ஏ.எம்.றகுமத்துல்லா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பெளஸ்.உட்பட கல்வியாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது ஒய்வு பெற்றுச் செல்லும் ஆரம்ப கல்வி இணைப்பாளர் ஏ.எம். தாஜூதீன் அவர்கள் கல்விக்காக ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மேலும் கல்வி அதிகாரிகளால் தாஜூதீன் அவர்களின் பல்வேறுபட்ட ஆளுமைகள். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அவரின் அர்ப்பணிப்புக்கள் தொடர்பாக பாராட்டி உரையாற்றினர்.

அத்தோடு பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: