மூதூர் பிரதேச செயலக பிரதேச செயலாளராக அண்மையில் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்ட சட்ட முதுமாணி பிர்னாஸ் இஸ்மாயில் அவர்களை சிலோன் மீடியா போரம் உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று (20) சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள், அத்தியாவசிய உதவிகள், அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கள நிலவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் பிரதேச செயலாளரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இதில் சிலோன் மீடியா போரம் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், லக்ஸ்டோ மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் மருதூர் ஏ.எல். அன்சார், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ.எஸ். எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர்களான எம்.வி.எம். றிம்சான், என்.எம். சிறாஜ்டீன், என்.எம். அப்ராஸ் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உறுப்பினர்களான எம் வி.எச். நியாஸ், ஏ.எல்.எம். நிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: