News Just In

11/07/2025 08:46:00 AM

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்




எதிர்வரும் காலங்களில் இலங்கையின் வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்படலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு தாக்கம் ஏற்பட கூடும் என நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

குறித்த விடயத்தை அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கலாம்,.
அதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதோடு அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் பாரிய பற்றாக்குறையும் உருவாக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சுயமாக மீட்சி பெறும் இலங்கை போன்ற நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

வாகனஇறக்குமதியால்டொலர்பெருமளவுவெளியேற்றப்படுகின்றன.இலங்கையில் வெளியேற்றப்படும் டொலரை விட உள்வரும் டொலர் பாரிய வேறுப்பாடாகும்.

டொலர் சேர்வது குறைவாகும். அதனால் டொலரில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்திக்க கடன் வாங்க வேண்டும்.

அதனால் இன்றைய சூழலில் கடன் பெற்றுக் கொள்ளவும் முடியாது. இவ்வாறான காரணங்களால் ரூபாவின் பெறுமதிக்கும் பெரும் தாக்கம் செய்யலாம்.

வாகன குத்தகையில் கடந்த மூன்று மாதங்களில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.வாகன இறக்குமதிகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மேலும் குத்தகையில் மாற்றங்கள் செய்யக் கூடும் என்றார்.

No comments: