ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பில் தமிழரசுக்கட்சியினர்.. நடந்தது என்ன!
தமிழரசுக் கட்சியின் 8 நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி உடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டதாக ஞானமுத்து ஸ்ரீநேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதிர்வரும் ஆண்டு பேச ஆரம்பிப்போம் என ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments: