பன்நூலாசிரியர் டொக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “ஓட்டகச் சிவிங்கி பொம்மை” மழலைப் பாடல்கள் நூல் வெளிட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வையொட்டியதாக இந்த நூல் வெளியீடு ஏறாவூர் ஓட்டுப்பள்ளி அஹமட் பரீட் பொது நூலக வளாகத்தில் புதனன்று 19.11.2025 இடம்பெற்றது.
டொக்டர் ஜலீலாவின் இந்த “ஒட்டகச் சிவிங்கி பொம்மை" மழலைப் பாடல்கள் நூல் இரட்டை நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐந்தாயிரம் மழலைப் பாடல்களின் தொகுப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ்நாடு தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கமும் நிலா வட்டம் இலக்கிய அமைப்பும் சேர்ந்து ஒன்றிணைந்த உலக சாதனையாக (GROUP OF WORLD RECORD) ஐந்தாயிரம் மழலைப் பாடல்கள் (நூறு கவிஞர்கள் தலா ஐம்பது மழலைப் பாடல்கள்) தொகுத்து கவித்தேன் தூளி எனும் பெயரில் பெரிய தொகுப்பு நூலாக வெளியிட்டது. அந்த நூறு மழலைப் பாடல்களில் உள்வாங்கப்பட்டதுதான் ஒட்டகச்சிவிங்கி பொம்மை மழலைப் பாடல்கள்.
இந்த இரட்டை நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் மழலைப் பாடல்களின் தொகுப்பில் டொக்டர் ஜலீலாவின் 50 மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
“ஒட்டகச் சிவிங்கி பொம்மை" மழலைப் பாடல்கள் நூலின் முதல்பிரதி கவிஞரின் தாயார் சித்தி பௌசியாவுக்குச் சமர்ப்பணமாக வழங்கி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் ஏறாவூர் ஏறாவூர் பொது நூலக நூலகங்களின் நூலகர்களிடமும் நூலின் பிரதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன. மழலையர்களுக்கும் நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஏறாவூர் நகர சபை மற்றும் பொது நூலகங்களின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் பிரதித் தவிசாளர் ஞானசேகரன் கஜேந்திரன் வைத்திய அதிகாரி எச். எம். மௌஜூத், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம் மஹ்பூல், ஏறாவூர் பொது நூலகங்களின் மேற்பார்வை அலுவலர் ஏ. ஹாறூன், விடயத்திற்குப் பொறுப்பான அலுவலர் ஏ.ஆர். சஞ்ஜீதா, அஹமட் பரீட் பொது நூலக பொறுப்பாளர் பி.என்.எப். றிஸாதா உட்பட இன்னும் பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
No comments: