News Just In

11/19/2025 07:00:00 PM

பசிலுக்கு பிடியாணை வரக்கூடிய நாளில் பேரணிக்கு ஓடும் மகிந்த! திருமலை புத்தருடன் சில B பிளான்கள்


பசிலுக்கு பிடியாணை வரக்கூடிய நாளில் பேரணிக்கு ஓடும் மகிந்த! திருமலை புத்தருடன் சில B பிளான்கள்



திருமலையில் குந்தவைக்கப்பட்ட புத்தர்சிலையை மையப்படுத்தி ராஜபச்ச தரப்பு பௌத்த பிக்குகளுடன் இணைந்து மேற்கொள்ளும் கமுக்க நகர்வுகளுக்கு சில பின்னணிகள் உள்ளன.

தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை அவிழ்த்துவிடும் கிழக்கின் அம்பேபிட்டிய சுமணரத்தின தேரருக்கு தனது கரங்களால் நேற்று நாமல் உணவு பரிமாறிய காட்சி உட்பட்ட விடயங்கள் பகிரங்கப்பட்டுள்ளன.

திருமலை புத்தர் சிலை அதிர்வுகளின் பின்னணியுடன் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அமைச்சரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான பசில் ராஜபச்சவுக்கு நாளை மறுதினம் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பிடியாணைக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

நவம்பர் 21 ஆம் திகதியன்று பசில் கட்டாயமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென கடந்த மே மாதத்தில் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டாலும் அவர் இன்னும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பவில்லை.

No comments: