News Just In

10/25/2025 04:48:00 PM

மட்டக்களப்பு வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக..!இரா சாணக்கியன்

மட்டக்களப்பு வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக..!



நேற்றைய தினம் இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 10.10.2025. எமது மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக பிரச்சனை ஒன்று என்னால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் வைத்தியர்களின் இடமாற்றமானது மற்றைய மாவட்டத்தை விட உடனடியாக இடம்பெறுகின்றது ஆனால் அதற்கு பதிலீடாக வைத்தியர்களை வழங்கும் வீதம் மிக குறைவாகக் காணப்படுகின்றது இதனால் எமது மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள். பல மட்டக்களப்பு வைத்தியசாலைகள் வைத்தியர்களின் பற்றாக்குறையினால் செயலிழந்து காணப்படுகின்றது. மற்றைய மாவட்டங்களில் இவ்வாறான உடனடி இட மாற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறாயினும் அவர்களுக்கு பதிலீடாக ஒருவரையோ பலரையோ வழங்கித்தான் இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ள படுகின்றது . மட்டக்களப்பை பொறுத்தவரையில் இவ் விடயத்திலும் அரசு பாரபட்சமாக செயல்படுகின்றது.

No comments: