மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை !
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் இருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளி க்கு மேல் 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். இது அந்த பாடசாலையின் வரலாற்று சாதனையாகும். இதுவரை காலமும் அது கூடியதாக 5 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளி க்கு மேல் பெற்ற மாணவர்களான எம்.ஜே.எப். நிஹ்லா (145 புள்ளிகள்), எல்.எப். றுப்லா (138 புள்ளிகள்), எம்.எச்.எப்.ஷிஃபா (133 புள்ளிகள்), ஜே.எம் .மஹாஸ் (136 புள்ளிகள்), ஆர்.ஐ. மெஹ்விஷ் (136 புள்ளிகள்), எம். இசட். ஹலிஷ் அகமது (136 புள்ளிகள்), எம்.ஜே.எப். சாரா (133 புள்ளிகள்) ஆகியோரை பாடசாலை சமூகத்தினர் பாராட்டி கௌரவித்தனர்.
இம் மாணவர்களின் வெற்றிக்காக தயார்படுத்திய ஆசிரியர்கள், பகுதித்தலைவர், ஆரம்ப பிரிவு ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் பிரதி அதிபர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொண்ட கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், மேலதிக வகுப்புகளுக்கு வருகை தந்து கற்பித்த ஆசிரியர், மேலதிக வகுப்பிற்காக உதவி செய்த பழைய மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என பாடசாலை அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் இந்த மாணவர்களின் பாராட்டு நிகழ்வின் போது தெரிவித்தார்.
No comments: