News Just In

9/08/2025 08:49:00 AM

மீண்டும் பிரகாசித்த சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயம் !

மீண்டும் பிரகாசித்த சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயம் !


மாளிகைக்காடு செய்தியாளர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயத்தில் இருந்து 6 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 23 மாணவர்கள் 100 க்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூறுல் ஹுதா உமர் அவர்களும், பாடசாலை சமூகமும் இணைந்து மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும், அதிபரையும் பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சிறந்த அடைவு மட்டங்களை வெளிப்படுத்தி வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களான எச்.எம்.பாத்திமா அய்மன் சாரா (163 புள்ளி), எப்.எப். சஹாமா (151 புள்ளி), எம்.ஏ. பாத்திமா அபிய்யா (148 புள்ளி), எம்.ஐ.பாத்திமா இப்பத் ஹானியா (145 புள்ளி), என்.எம்.நிமாத் (142 புள்ளி), ஜே. பாத்திமா ஹதீதா (139 புள்ளி) அவர்களையும் ஓரிரு புள்ளிகளால் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெறத் தவறிய மாணவர்களையும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மாலையிட்டு பாராட்டினர். மாணவர்களுக்கு கற்பித்த ஆசான்களான எஸ்.எல். நவாஹிர் மற்றும் முஹமட் சிராஜுதீன் ஆகியோர்களும் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டப்பட்டனர்.

சென்ற வருடம் (2024) இப்பாடசாலையில் 10 மாணவர்கள் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனைகளுக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹாங்கீர், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அஸ்மா மலீக், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் நூருல் ஹுதா உமர் உட்பட அதன் உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் எப்.எம்.ரஃபி மற்றும் இந்த அடைவுக்கு உதவிய அனைவருக்கும் அதிபர் அவர்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments: