News Just In

9/08/2025 08:57:00 AM

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விவசாயி மரணம் : சம்மாந்துறை பொலிஸார் விசாரணை !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விவசாயி மரணம் : சம்மாந்துறை பொலிஸார் விசாரணை 


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மந்துறை மல் ஆறாம் வீதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 60) காலமானார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை - மல்வத்தை பகுதியில் அமைந்திருக்கும் புதுக்காடு என்று அழைக்கப்படும் காணிக்குள் இயற்கை உரம் இடுவதற்கு சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சம்மந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணையை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹீர் முன்னெடுத்ததுடன் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் கையளித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments: