கொழும்பு மாநகர சபையின் நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.
கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும் செயலாளருமான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.
இக்குழுவில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உறுப்பினர் உட்பட குழுவின் மற்றைய ஏனைய உறுப்பினராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிகம் நியமித்தன் மூலம் தேசிய மக்கள் சக்தி நல்லாட்சி, முன்மாதிரியான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.
வாக்களிப்பின் அடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கலீலுர் ரஹ்மான் நிலைக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் துறூவி, ரவீந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அனாஸ், சுயேட்சை குழு உறுப்பினர் இமல்ஸ ஆகியோர் வாக்களித்தனர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹேஷிகா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: