News Just In

8/06/2025 01:33:00 PM

தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு கெளரவிப்பு !

தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு கெளரவிப்பு !


நூருல் ஹுதா உமர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இடம்பெற்று முடிவடைந்த 2025 ஆம் கல்வியாண்டுக்கான தவணைப் பரீட்சையில் தரம் - 10 பிரிவில் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற (09"A") மாணவிகளை கெளரவித்து முன்னேற்ற அறிக்கை வழங்கி வைக்கும் நிகழ்வு பகுதி தலைவி எம்.ஐ. சாமிலா தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டார். முதலாம் தவணைப் பரீட்சையில் 18 மாணவிகள் 09"A" சித்திகள், 36 மாணவிகள் 08"A/BC" சித்திகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பகுதிவாரியாக ஏனைய மாணவிகளை ஊக்கமளித்தல், கற்றலைத் தூண்டும் நோக்கிலும் மற்றும் சித்தி வீதத்தினை அதிகரித்தல், பெற்றோர்கள் விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய தரம் - 10 மாணவிகளை அதிதிகள் முன்னிலையில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதி, உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: