News Just In

8/06/2025 07:06:00 AM

மன்னாரில் நள்ளிரவில் அமைதியின்மை - வீதியை மறித்து மக்கள் பெரும் போராட்டம்!

மன்னாரில் நள்ளிரவில் அமைதியின்மை - வீதியை மறித்து மக்கள் பெரும் போராட்டம் 


மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சற்று முன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பதற்றமான சூழலால் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: