News Just In

7/28/2025 12:59:00 PM

புலம்பெயர வேண்டாமென்று வடக்கு, கிழக்கு தமிழர்களை கேட்கும் துணிச்சல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா?

புலம்பெயர வேண்டாமென்று வடக்கு, கிழக்கு தமிழர்களை கேட்கும் துணிச்சல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா? - வெலிக்கடை சிறை படுகொலைகள் நினைவேந்தல் நிகழ்வில் பத்திரிகையாளர் கேள்வி


வெளிநாடுகளுக்கு தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருப்பதால் வடக்கு மாகாணம் இலங்கையில் சனத்தொகையில் மிகவும் குறைந்த மாகாணமாகிவிட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் வடக்கில் வாக்காளர்களின் தொகை மேலும் குறைவடையும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருக்கும் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று உரத்துக்குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை புலம்பெயர வேண்டாம் என்று கேட்கும் துணிச்சல் இருக்கிறதா என்று கேள்வியெழுப்பினார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சனிக்கிழமை (26) மாலை யாழ். நகர் தந்தை செல்வா கலையரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த கறுப்பு ஜூலை வெலிக்கடை சிறை தமிழ்க் கைதிகள் படுகொலை நினைவேந்தல் - தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வில் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போது அவர், தொடர்ந்தும் சொந்த மண்ணில் வாழ்ந்தால் தங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் இனிமேலாவது கடைப்பிடித்து தமிழ் அரசியல்வாதிகள் கற்பனாவாத சுலோகங்களை விடுத்து நடைமுறைச் சாத்தியமான பாதையைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments: