News Just In

7/13/2025 08:28:00 PM

சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்குமாறு மனநல மருத்துவர் ரூமி கோரிக்கை

சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்குமாறு மனநல மருத்துவர் ரூமி கோரிக்கை!



க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள்.

இதனால் குறைவான பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் இதனைப் பார்க்கும்போது, அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள்.

எனவே, தேர்வில் சித்தியடையாத மாணவர்கள் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை அடையாத மாணவர்கள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாது சிறிது காலம் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.

மற்றும் தமது பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளை மற்ற பிள்ளைகளின் முடிவுகளுடன் ஒப்பிட வேண்டாம் எனவும், பரீட்சையில் சித்தியடையாததற்காக தங்கள் பிள்ளைகளைத் திட்டி, அவர்களின் மனநிலையை மோசமடைய செய்ய வேண்டாம் எனவும் மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாத போது ஏமாற்றமடைகின்றார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கலாம். அவ்வாறான போக்கினை பிள்ளைகளில் உணர்ந்தால், உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என சிறப்பு மனநல மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: