News Just In

7/14/2025 08:55:00 AM

செம்மணியில் முடிவில் சிக்கப் போவது யார்.. இராணுவத் தளபதிகளுக்கு ஆபத்து ஏற்படுமா!

செம்மணியில் முடிவில் சிக்கப் போவது யார்.. இராணுவத் தளபதிகளுக்கு ஆபத்து ஏற்படுமா!



யாழ். சித்துபாத்தி - செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்களின் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஈழத்தமிழர்கள் தரப்பில் இலங்கை இராணுவத்தின் மீது இவ்விடயத்தில் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

மேலும், தமிழர்களுக்கு நீதி வழங்கி குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையை கோரி நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

No comments: