News Just In

5/12/2025 06:49:00 AM

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி! புலம்பெயர் கனேடிய அமைச்சர் உருக்கம்



கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, இன்றைய தினம் கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டருந்தது 

இது குறித்து கனேடிய நீதித்துறை அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தனது முகநூல் பதிவில்,

“இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வலிமை மற்றும் மீள் எழுச்சி தன்மையை இது கௌரவிக்கின்றது. அவர்களின் அர்ப்பணிப்பே இந்த நினைவுத்தூபி உருவாகுவதற்கான காரணம்.

நான் கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் ,கனடா தமிழர் தேசிய பேரவை பிரம்டன் தமிழ் சங்கம் ஆகிய தரப்பினருக்கும் எங்கள் கதைகள் ஒருபோதும் மறக்கப்படாமலிருப்பதற்காக போராடியவர்களிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுக்கும் அதேவேளை ஐக்கியப்பட்டவர்களாக வலிமையானவர்களாக விளங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments: