பிள்ளையான் வசமிருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கிகளை வழங்கியது யார்..!
பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலத்தில் இருந்து இரண்டு அதி நவீன இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டமையானது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கே அதிர்ச்சியளித்திருந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அண்மையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது, அவரின் அலுவலகத்தில் இருந்து, Colt MK18 Mod 1 M203 என்கின்ற அதிநவீன துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.
குறித்த துப்பாக்கிகள் விலையுயர்ந்த அமெரிக்க தாயரிப்புகள் என்பதுடன், இவை சிறிலங்கா விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற ஆயுதமாகும்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த துப்பாக்கிகள் முன்னைய அரசாங்களின் போது வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், முன்னைய அரசாங்கம் என்று கூறப்படும் போது ரணில் விக்ரமசிங்கவின் மீதே சந்தேகம் எழுந்துள்ளது, ஏனென்றால் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானை சந்திப்பதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவந்தது.
இந்த நிலையில், முன்னைய அரசாங்கம் பிள்ளையானுக்கு போர் களத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் குறித்த நவீன இயந்திரத் துப்பாக்கிகளை வழங்கியதற்கான காரணம் என்ன?
4/22/2025 06:56:00 AM
பிள்ளையான் வசமிருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கிகளை வழங்கியது யார்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: