News Just In

3/05/2025 06:53:00 AM

மட்டக்களப்பில் வாள் வெட்டு..! பாராளுமன்றத்தில் சர்ச்சை..!

மட்டக்களப்பில் வாள் வெட்டு..! பாராளுமன்றத்தில் சர்ச்சை..!பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்



மட்டக்களப்பில் வாள் வெட்டு..! பாராளுமன்றத்தில் சர்ச்சை..! நேற்றைய தினம் 04.03.2025 பாராளுமன்றத்தில். இந்த சபையிலே மிக முக்கியமான ஒரு விடயத்தை எழுப்ப வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று கல்லடியில் மட்டக்களப்பு நகரப் பகுதியில் ஒரு வாள் வெட்டு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சபாநாயகர் இவ் பிரச்சனை தொடர்பாக தெரிவித்த போது: இது தேசிய பிரச்சினை இல்லை. நீங்கள் இது தொடர்பில் தனியாக ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றை முன்வையுங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்: 92.2.பீ. நீங்கள் இதனை வாசியுங்கள். ஒரு நிமிடம் நீங்கள் அதனை வாசியுங்கள். அதன்போது நான் தற்போதைய பிரச்சினை குறித்து கூறிவிடலாம்.

அந்தவகையில், பாதாள உலகக் குழுக்களினால் மட்டக்களப்பில் சில குழப்பங்கள் நடைபெறலாம் என அண்மையில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அதற்கமைய நேற்று கல்லடியில் நடைபெற்றிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரையம்பதியில் நடைபெற்றிருக்கிறது.
சபாநாயகர்: பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே. இது தொடர்புடையது அல்ல. உங்களுக்கு வாய்ப்பை பெற்றுத் தர முடியாது.

நீங்கள் ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றை கொண்டு வாருங்கள். அல்லது 27.2இன் கீழ் கேள்வியாக இவ்விடயத்தை முன்வையுங்கள். இன்றேல் இது தொடர்புடையது அல்ல.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ் விடையம் தொடர்பில்: தயவுசெய்து 92.2இல் பாருங்கள். முக்கியமான ஒரு விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பேச உரிமை உண்டு. நான் கட்சித் தலைவன். எனவே நாங்கள் கூறுவதனை கேட்கும் பொறுப்பு உங்களுக்கு உண்டு. எமது பகுதிகளில் மக்களை துண்டு துண்டாக வெட்டுகின்றனர். தயவுசெய்து நாங்கள் கூறுவதை கேளுங்கள். அவர் கிழக்கை ஆளுகின்றார். நான் வடக்கை ஆளுகின்றேன். வேறு எவரும் எழுந்து நின்றவுடன் மணி கணக்கில் பேச இடமளிக்கின்றீர்கள் தானே. ஏன் எங்களுக்கு தர முடியவில்லை. நீங்கள் தவறிழைக்கின்றீர்கள் சபாநாயகர் அவர்களே. நாங்கள் எழுந்தவுடன் மாத்திரம் ஏன் 'மைக்கை' தர முடியவில்லை? ஏன் நாங்கள் தமிழில் பேசினால் உங்களுக்கு கேட்க முடியாதா?

சபாநாயகர்: கௌரவ உறுப்பினர் அவர்களே, அது தான் நடைமுறை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்களே உங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றை கொண்டு வரலாம்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் : 92.2இன் கீழ் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கேள்விகளை எழுப்புவதற்கு ஒரு நிமிட நேரம் காலம் வழங்கி பேச சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கியதை போன்று இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கேள்விகளை எழுப்புவதற்கு ஒரு நிமிட நேரம் வழங்குங்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு தரப்பினருக்கு அவ்வாறு பேச நேரம் வழங்கி இவர்களுக்கு வழங்காவிடின் அது தவறு. எனவே தயவுசெய்து ஒவ்வொரு நிமிட காலத்தை ஒதுக்கி அவர்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளியுங்கள்.

சபாநாயகர்: பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் குறிப்பிட்ட விடயத்தை ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றின் மூலமாக அல்லது 28.2இன் கீழ் பேச முடியும் என நான் குறிப்பிட்டேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, இது ஒரு நிமிட பிரச்சினை. இதனை நான் உங்களுக்கு தெளிவுபடுத்தி கேட்டிருந்தேன். இதற்கு இவ்வளவு பெரிய பிரச்சினை தேவையற்றது. தற்போது நீங்கள் தான் 20 நிமிடத்தை வீணடித்துள்ளீர்கள்.

கௌரவ அமைச்சர் அவர்களே, கடந்த வாரம் மட்டக்களப்பில் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஒரு வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பாரிய அச்சம் கொண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று இரவும் மட்டக்களப்பு நகரில் வாள் வெட்டு குழுவொன்றினால் வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பிலும் இவ்வாறான விடயம் நடக்கலாம் என ஜனாதிபதி கூறியிருந்தார். எனவே இது தொடர்பில் அவசரமாக கவனத்தில் கொண்டு இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தான் நான் கேட்டேன். இவ்வளவு தான் எனக்கு கேட்க வேண்டியது. நீங்கள் இந்த பாராளுமன்றத்தை திருகோணமலை வைத்தியசாலையின் MS போன்று செயற்படுத்த போனமையால் தான் இவ்வளவு பிரச்சினை. நன்றி.

No comments: