News Just In

3/25/2025 06:44:00 PM

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள்..!

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள்..!



கொழும்பில் நான்காம் மாடி சி.ஜ.டி விசாரணைப் பிரிவில் இருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் கொலை செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸகரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் இரவு கடமையில் இருந்த பொலிஸ் சாஜன் நிரோசன் இந்திர பிரசன்னா, மற்றும் பொலிஸ் கொஸ்தாப்பரர் டினேஸ் ஆகிய இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஸாரானின் குழுவைச் சேர்ந்த 4 பேரையும் சிஐடியினர் கைது செய்தனர்

இதனையடுத்து 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சிஐடி விசாரணைப் பிரிவில் இருந்து வரும் நான்கு பேரையும் மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இவர்களை எதிர்வரும் யூன் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

No comments: