திருமலையில் 5,226 ஏக்கர் நிலத்தை துறைமுக அதிகார சபை வசம் - குகதாசன் எம்.பி
இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5,226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது உள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டு மென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
No comments: