News Just In

2/21/2025 01:02:00 PM

Sadaqa Bulletin" அமைப்பினால் வழங்கப்பட்ட நீர் தாங்கியுடனான நீர் இணைப்பு உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிப்பு.!

Sadaqa Bulletin" அமைப்பினால் வழங்கப்பட்ட நீர் தாங்கியுடனான நீர் இணைப்பு உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிப்பு


நூருல் ஹுதா உமர்

Sadaqa Bulletin அமைப்பினால் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு தேவையாக இருந்த மின்மோட்டர் மற்றும் நீர்த்தாங்கியுடனான குழாய்க் கிணறு உத்தியோகபூர்வமாக பாடசாலை நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய Sadaqa bulletin அமைப்பின் பிரதிநிதி பொறியியலாளர் எம்.சி.கே. நிஷாத் அவர்களின் பரிந்துரையின் பேரில் குறித்த திட்டம் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதி பிரோஸ் அவர்களிடமிருந்து, பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் ஆலோசனைக்கமைய இந்நீர்த்திட்டத்தினை பாடசாலை உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான், ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.சீ.ஏ. மாஹிர், பாடசாலை பொருளாளர் ஏ.எம்.எம். ஸாஹிர் மற்றும் ஆரம்ப பிரிவு ஆசிரியை திருமதி ஹம்சா ஆகியோர் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டனர்

No comments: