கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களின் பேரில் சர்வதேச தாய்மொழி தினமான பெப்ரவரி 21 ஆம் திகதி “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மொழி” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் போது தாய் மொழியின் முக்கியத்துவம் மற்றும் ஏனைய மொழிகளை மதிக்கும் தன்மை தொடர்பில் பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் அவர்களினால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களின் விசேட பேச்சு நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: