News Just In

2/20/2025 02:19:00 PM

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பலத்த பாதுகாப்பு


துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பலத்த பாதுகாப்பு



கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் வியாழக்கிழமை (20.02.2025) பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் சகல வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின்பு நீதிமன்ற வளாகம் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும், நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து காவல்துறையினரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க முடிகிறது   

No comments: