News Just In

2/19/2025 12:08:00 PM

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்; பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்; பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை


கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.




No comments: