News Just In

2/22/2025 12:14:00 PM

பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்புக்கு இடமில்லை - பாதுகாப்புச் செயலாளர்!

பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்புக்கு இடமில்லை - பாதுகாப்புச் செயலாளர்


பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்புக்கு இடமில்லையென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்ட விரோத ஆயுத பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு அல்லது பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: