News Just In

1/27/2025 06:51:00 PM

படத்தைப் பார்த்துதான் மனைவியை வெட்டி சமைத்தேன்! விசாரணையில் திடுக்கிட வைத்த நபர்

படத்தைப் பார்த்துதான் மனைவியை வெட்டி சமைத்தேன்! விசாரணையில் திடுக்கிட வைத்த நபர்




இந்திய மாநிலம் தெலங்கானாவில் மனைவியை கொன்று சமைத்ததாக கைது செய்யப்பட்ட நபர், விசாரணையில் படம் ஒன்றை பார்த்து கொடூரத்தை அரங்கேற்றியதாக கூறியுள்ளார்.
உடலை துண்டு துண்டாக

தெலங்கானாவின் ஐதராபாத்தில் 35 வயது பெண்ணான மாதவி காணாமல் போன 6 நாட்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவ வீரரான அவரது கணவர் குருமூர்த்தி (45), தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்துள்ளார்.

இதனையடுத்து குருமூர்த்தியை பொலிஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அவரை கொலை செய்ததாக குருமூர்த்தி ஒப்புக்கொண்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் திரைப்படம் ஒன்றைப் பார்த்து மனைவியின் உடலை அப்புறப்படுத்த முயற்சித்ததாக குருமூர்த்தி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி படத்தில் வருவது போல், கொல்லப்பட்ட மனைவி உடல் பாகங்களை அப்புறப்படுத்த அவர் முயற்சித்துள்ளார்.

No comments: