News Just In

1/02/2025 10:49:00 AM

புத்தாண்டு தினத்தில் மட்டக்களப்பில் கிளீன் சிறிலங்கா வேலை திட்டம்!

புத்தாண்டு தினத்தில் மட்டக்களப்பில் கிளீன் சிறிலங்கா வேலை திட்டம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிளீன் சிறிலங்கா வேலை திட்டம் 2025 புத்தான்டு தினத்தன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் முதல் நிகழ்வாக கிளீன் சிறிலங்கா திட்டத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைப்பது நிகழ்நிலை ஊடாக உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் கிளீன் சிறிலங்கா சத்தியப்பிரமாண நிகழ்வும் மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது.

No comments: