
பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எனவும் அதற்கான சமாதான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் முறைமை எவையும் இல்லை. பொருந்தோட்ட பொருளாதாரமும் குறைவடைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும்மே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இலங்கை உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை கட்டுவதென்றால் உடனடி வழிமுறைகள் அவசியம்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்ச்சாலைகளம் இன்னும் இயங்காமலே காணப்படுகிறது.” என்றார்.
No comments: