வருடத்தின் முதல் விண்கல் மழை இன்றுவானில் வடகிழக்கு பகுதியில் அதிகாலை 5.00 மணிவரை காணலாம்
இந்த வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, வானில் வடகிழக்கு பகுதியில் அதிகாலை 5.00 மணிவரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என்றும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்
1/03/2025 05:18:00 PM
வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: