யாழ் வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை
கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது
அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது.
அதன்போது இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து குறித்த சிலை வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1/13/2025 10:26:00 AM
யாழ் வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: