News Just In

1/22/2025 05:54:00 PM

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு 


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்திற்கு வாழ்வாதார சுயதொழில் முயற்சிக்காக இலங்கை அகதிகள் புனர்வாழ்வு ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் (oferr) ஒபெர் சிறிலங்கா நிறுவனத்தின் உதவியுடன் நவீன தையல் இயந்திரம் செவ்வாயன்று 21.01.2025 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு அகதிகளாக இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் 2023ஆம் ஆண்டு நாடு திரும்பி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் குடும்பத்திற்கே இந்த தொழில் உபகரண உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் புனர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஆலோசகரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே கருணாகரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற தையல் இயந்திரம் கையளிக்கும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, ஏறாவூர்ப்; பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், பிரதேச உதவிச் செயலாளர் நிருபா பிருந்தன், மாவட்ட இடர் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் உட்பட பயனாளிக் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்

No comments: