
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பஸ், சிறிய ரக உழவு இயந்திரம் (லேண்ட் மாஸ்டர்) மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர்.
இன்று (18) அதிகாலை கொடிகாமம் - மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: