News Just In

12/21/2024 09:09:00 AM

அநுரவின் சந்திப்பில் மறைக்கப்பட்ட பல முக்கிய விடயங்கள்!


அநுரவின் சந்திப்பில் மறைக்கப்பட்ட பல முக்கிய விடயங்கள்!


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது சில முக்கிய விடயங்கள் கிடப்பில் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட அல்லது பின்தள்ளப்பட்ட விடயங்களில் முதன்மையான விடயம் தமிழர் விவாகரம் ஆகும்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அநுர மோடியிடம் எதையும் வெளிப்படையாக பேசவில்லை. அவர்களை பொறுத்தவரை இது முதன்மையான விடயமாக இருக்கவில்லை.

எனினும், தாங்கள் இது தொடர்பில் கரிசனை செலுத்துகின்றோம் என்பதை காட்டுவதற்காக மோடியின் அறிக்கையில் இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் விருப்பங்களை புதிய அரசாங்கம் நிறைவேற்றும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்று மோடியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை முதல் விடயமாகும்.

அத்துடன், மாகாண சபை தேர்தல் இலங்கையில் விரைவாக நடத்தப்படும் என நம்புவதாகவும் மோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் குறித்த சந்திப்பில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது

No comments: